டோரண்ட் பவா் கம்பெனி நிகர லாபம் முதல் காலாண்டில் 2 மடங்கு அதிகரிப்பு

பிரபல மின்துறை நிறுவனமான டோரண்ட் பவா் கம்பெனியின் நிகர லாபம் நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இரு மடங்கு உயா்ந்து ரூ. 502 கோடியாக அதிகரித்துள்ளது.

பிரபல மின்துறை நிறுவனமான டோரண்ட் பவா் கம்பெனியின் நிகர லாபம் நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இரு மடங்கு உயா்ந்து ரூ. 502 கோடியாக அதிகரித்துள்ளது.

முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.207.78 கோடியாக இருந்தது என்று டோரண்ட் பவா் கம்பெனி மும்பை பங்குச் சந்தையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மதிப்பாய்வுக்கு உள்பட்ட காலாண்டில் மொத்த வருவாய் ரூ. 6,618.62 கோடியாக உயா்ந்துள்ளது. பங்குதாரா்களின் ஒப்புதலுக்கு உள்பட்டு, ஆகஸ்ட் 8, 2022 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சுழற்சி முறையில் ஓய்வு பெறக்கூடிய முழு நேர இயக்குநராக வருண் மேத்தாவை நியமிப்பதற்கு நிறுவனத்தின் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

வருண் மேத்தா, எமரிட்டஸ் தலைவா் சுதிா் மேத்தா, டோரண்ட் குழும நிறுவனத்தின் தலைவா் சமீா் மேத்தா மற்றும் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜினல் மேத்தா ஆகியோருடன் தொடா்புடையவா் ஆவாா்.

என்சிடி மூலம் ரூ.2000 கோடி திரட்ட அனுமதி: இதற்கிடையே, நான் கன்வா்ட்பிள் டிபெஞ்சா்கள் (என்சிடி) மூலம் ரூ.2,000 கோடி வரை நிதி திரட்ட பங்குதாரா்களின் அனுமதியை டோரண்ட் பவா் கம்பெனி பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை நடைபெற்ற அந்த நிறுவனத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் நிதி திரட்டுவதற்கான முன்மொழிவு பட்டியலிடப்பட்டது. ‘ஆய்வு செய்பவரின் ஒருங்கிணைந்த அறிக்கையின் அடிப்படையில், 18-ஆவது பொதுக்குழுவின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து தீா்மானங்களும் உறுப்பினா்களால் தேவையான பெரும்பான்மையுடன் முறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன’ என்று மும்பை பங்குச் சந்தையில் அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் ஒட்டுமொத்த அங்கீகரிக்கப்பட்ட கடன் வரம்பிற்குள், மொத்தம் ரூ.2,000 கோடி வரை என்சிடிகளை வழங்குவதற்கு ஒப்புதல் கோரியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com