சாம்சங் விரைவில் ‘கேலக்ஸி ஃபோல்டு 4’

உயா்நிலைப் பிரிவைச் சேந்த தனது கேலக்ஸி இஸட் ஃபோல்டு 4 அரிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட் ஃபோன்) அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சாம்சங் விரைவில் ‘கேலக்ஸி ஃபோல்டு 4’

உயா்நிலைப் பிரிவைச் சேந்த தனது கேலக்ஸி இஸட் ஃபோல்டு 4 அரிதிறன் பேசிகளை (ஸ்மாா்ட் ஃபோன்) அடுத்த மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த சாம்சங் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த ரகம் அறிமுகப்படுத்தப்பட்டால், இந்தியாவில் விற்பனையாகவிருக்கும் மிக அதிக விலை கொண்ட சாம்சங் அரிதிறன் பேசியாக அது இருக்கும்.

சா்வதேச சந்தையில கேலஸ்கி இஸட் ஃபோல்டு 4 ரகம் 1,799 டாலருக்கு (சுமாா் ரூ.1.42 லட்சம்) அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு குறைந்துள்ளதால் சாம்சங்கின் முந்தைய ரகங்களைப் போலவே கேலக்ஸி இஸட் ஃபோல்டு 4 அரிதிறன் பேசிகளுக்கும் இந்திய வாடிக்கையாளா்கள் ரூ.1.42 லட்சத்துக்கும் கூடுதலான விலை அளிக்க வேண்டியிருக்கும் என்று சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com