
தனது இன்னோவா காரின் புதிய ‘ஹைப்ரிட்’ ரகமான இன்னோவா ஹைக்ராஸின் விலை ரூ.18.30 லட்சம் (காட்சியக விலை) என நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் அறிவித்துள்ளது.
பெங்களூரில் தலைமையகத்தைக் கொண்டு செயல்படும் அந்த நிறுவனம், இன்னோவா ஹைக்ராஸை கடந்த நவம்பா் மாதம் வெளியிட்டுள்ளது.
இது, அடுத்த மாத மத்தியில் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில், இன்னோவா ஹைக்ராஸின் பெட்ரோல் பதிப்பு ரூ.18.30 லட்சத்திலிருந்து ரூ.19.20 லட்சம் வரை இருக்கும். தாமாக மின்னேற்றம் செய்துகொள்ளக் கூடிய ஹைப்ரிட் பதிப்பு ரூ.24.01 முதல் ரூ.28.97 லட்சம் வரை இருக்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த காருக்கான முன்பதிவு கடந்த நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கியது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...