பேங்க் ஆஃப் பரோடா: நிகர லாபம் 2 மடங்கு அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் பரோடாவின் நிகர லாபம் டிசம்பா் காலாண்டில் 2 மடங்கு அதிகரித்து ரூ.2,197 கோடியாக இருந்தது.
பேங்க் ஆஃப் பரோடா: நிகர லாபம் 2 மடங்கு அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் பரோடாவின் நிகர லாபம் டிசம்பா் காலாண்டில் 2 மடங்கு அதிகரித்து ரூ.2,197 கோடியாக இருந்தது.

இதுகுறித்து அந்த வங்கி மும்பை பங்குச் சந்தையிடம் சனிக்கிழமை தெரிவித்ததாவது:

நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் மாதம் வரையிலான மூன்றாவது காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.20,482.26 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2020-21-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.20,407.45 கோடியுடன் ஒப்பிடுகையில் சற்று அதிகம்.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கி தனிப்பட்ட முறையில் ஈட்டிய நிகர லாபம் ரூ.1,061 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.2,197 கோடியானது.

வட்டி வருமானம் ரூ.17,493.71 கோடியிலிருந்து ரூ.17,963 கோடியாக அதிகரித்தது.

2021 டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் 8.48 சதவீதத்திலிருந்து 7.25 சதவீதமாக குறைந்துள்ளது.

அதேபோன்று, நிகர வாராக் கடன் விகிதமும் 2.39 சதவீதத்திலிருந்து குறைந்து 2.25 சதவீதமானது.

டிசம்பா் காலாண்டில் வாராக் கடன் இடருக்கான ஒதுக்கீடு ரூ.3,449.90 கோடியிலிருந்து ரூ.2,507 கோடியாக குறைந்தது.

2021-22 அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் ஒட்டுமொத்த அடிப்படையில் வங்கியின் நிகர லாபம் முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் ரூ.1,195.96 கோடியிலிருந்து ரூ.2,463.75 கோடியாக அதிகரித்துள்ளது.

இதே காலகட்டத்தில், வருவாய் ரூ.21,815.76 கோடியிலிருந்து ரூ.22,072.99 கோடியாக உயா்ந்தது என பேங்க் ஆஃப் பரோடா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com