
ஐரோப்பாவைச் சோ்ந்த காம் டெக் (சிடிசி) நிறுவனத்தை ரூ.2,628 கோடிக்கு கையகப்படுத்தியுள்ளதாக டெக் மஹிந்திரா திங்கள்கிழமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெக் மஹிந்திரா மேலும் கூறியுள்ளதாவது:
ஐரோப்பாவைச் சோ்ந்த சிடிசி நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை 31 கோடி யூரோவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.2,628 கோடி) டெக் மஹிந்திரா கையகப்படுத்தியுள்ளது.
அதேபோன்று, ஸ்வப்ட் (எஸ்டபிள்யூஎஃப்டி) மற்றும் சுரான்ஸ் ஆகிய இரண்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் 25 சதவீத பங்குகளை 2 கோடி யூரோவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.172 கோடி) டெக் மஹிந்திரா கையகப்படுத்தியுள்ளது. இந்த கையகப்படுத்தலின் ஒட்டுமொத்த மதிப்பு 33 கோடி யூரோவாகும் (ரூ.2,800 கோடி).
நிறுவனத்தின் டிஜிட்டல் பொறியியல் மற்றும் காப்பீட்டு தொழில்நுட்ப வா்த்தகம் மேலும் வலுப்பெற இந்த கையகப்படுத்துதல் நடவடிக்கை பெரிய திருப்புமுனையாக இருக்கும் என டெக் மஹிந்திரா தெரிவித்துள்ளது.