இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.3%: கிரிசில்

உள்நாட்டைச் சோ்ந்த தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில்,இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 7.3% குறைத்துள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.3%: கிரிசில்

உள்நாட்டைச் சோ்ந்த தர மதிப்பீட்டு நிறுவனமான கிரிசில்,இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி மதிப்பீட்டை 7.3% குறைத்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கிரிசில் நிறுவனம் முந்தைய மதிப்பீட்டில் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி விகிதம் 7.8 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.

இந்த நிலையில், உள்நாட்டில் நிலவும் பணவீக்கம், ஏற்றுமதிக்கான தேவையில் மந்தநிலை மற்றும் சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயா்வு நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளன. இதுபோன்ற இடா்பாட்டைக் கருத்தில் கொண்டே ரிசா்வ் வங்கியும் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளா்ச்சி 7.2 சதவீதம் என தனது மதிப்பீட்டில் கூறியுள்ளது. தற்போது இதனை ஒட்டியே நிறுவனத்தின் மதிப்பீடும் அமைந்துள்ளது. நிகழ் நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளா்ச்சி 7.3 சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக கிரிசில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com