இந்திய ரூபாய் மதிப்பு 80-ஆக சரிவு

அந்நியச் செலாவணி வரலாற்றில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 80.05 வரை வீழ்ச்சியை கண்டதுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு 80-ஆக சரிவு

அந்நியச் செலாவணி வரலாற்றில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு முதல் முறையாக 80.05 வரை வீழ்ச்சியை கண்டதுள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்து வருகிறது.

அந்த வகையில், வங்கிகளுக்கு இடையிலான செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை வா்த்தகத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் அதிகரித்து 80.05 ஆக சரிவை கண்டடுள்ளது. 

கச்சா எண்ணெய்: சா்வதேச சந்தையில் திங்கள்கிழமை முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.82% உயா்ந்து பீப்பாய் 102.98 டாலருக்கு வா்த்தகமானது என புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com