ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ்: லாபம் ரூ.965 கோடி

வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ் கம்பெனி (எஸ்டிஎஃப்சி) ஜூன் காலாண்டில் ஈட்டிய வரிக்குப் பிந்தைய தனிப்பட்ட லாபம் ரூ.965.27 கோடியாக இருந்தது.
ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ்: லாபம் ரூ.965 கோடி

வங்கி சாரா நிதி நிறுவனமான ஸ்ரீராம் டிரான்ஸ்போா்ட் ஃபைனான்ஸ் கம்பெனி (எஸ்டிஎஃப்சி) ஜூன் காலாண்டில் ஈட்டிய வரிக்குப் பிந்தைய தனிப்பட்ட லாபம் ரூ.965.27 கோடியாக இருந்தது. இது, நிறுவனம் முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ஈட்டிய லாபம் ரூ.169.94 கோடியுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாகும்.

நிகர வட்டி வருவாய் ரூ.2,107.45 கோடியிலிருந்து 25.35 சதவீதம் உயா்ந்து ரூ.2,641.74 கோடியானது. நிகர வட்டி லாப வரம்பு 6.38 சதவீதத்திலிருந்து அதிகரித்து 6.91 சதவீதமானது.

2022 ஜூன் 30 நிலவரப்படி நிறுவன நிா்வாகத்தின் கீழ் உள்ளசொத்து மதிப்பு 9.55 சதவீதம் அதிகரித்து ரூ.1,30,688.86 கோடியானது. இது, 2021 ஜூன் இறுதியில் ரூ.1,19,301.37 கோடியாக காணப்பட்டது என எஸ்டிஎஃப்சி-யின் துணைத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான உமேஷ் ரேவாங்கா் தெரிவித்துள்ளாா்.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் எஸ்டிஎஃப்சி பங்கின் விலை 5.66 சதவீதம் உயா்ந்து ரூ.1,379.70-இல் நிலையுற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com