
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காரின் சிறப்பம்சங்கள்
இந்திய வாகன சந்தையில், மாருதி சுஸுகி, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எஸ்யுவி வகை காரான மாருதி பிரெஸ்ஸா வகை காருக்கான முன்பதிவை இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியிருக்கிறது.
வரும் 30ஆம் தேதி வாகனச் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படும் புத்தம் புது மாருதி பிரெஸ்ஸா கார்களுக்கான முன்பதிவு தொடங்கியிருக்கிறது. முன்பதிவு செய்ய விரும்புவோர் ரூ.11,000 செலுத்தி தங்களுக்கான காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கான முன்பதிவு தொடங்கியிருக்கும் நிலையில், அதன் டீசர் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதன் சிறப்பம்சம் என்னவென்றால், மின்சார சன்ரூஃப் உள்ளிட்ட புதிய தலைமுறைக்கான பல்வேறு அம்சங்கள் இணைந்துள்ளன. இந்த புதிய கார் வெளிப்புற வடிவங்களில் மாற்றத்துடன், அதிக இடவசதி கொண்ட இருக்கைகள், பல தொழில்நுட்ப வசதிகள், மேம்படுத்தப்பட்ட எஞ்ஜின் இடம்பெற்றுள்ளது.
Feel the breeze while cruising through the city! Introducing Electric Sunroof in the All New #HotAndTechyBrezza.#BookingsOpen #AllNewBrezza #MarutiSuzukiArena #MSArena #MarutiSuzuki pic.twitter.com/ipJI67BbCA
— Maruti Suzuki Arena (@MSArenaOfficial) June 20, 2022
டூயல்-டோன் 16 இன்ச் அலாய் சக்கரங்கள், காரின் உள்புறம் 360 டிகிரி கோண கேமரா, 6 ஏா் பேகுகள், சக்கரங்களின் காற்றின் அழுத்தத்தைக் கண்காணிக்கும் வசதியும் இந்த காரை வாகனச் சந்தையில் முன்னிலையில் வைத்திருக்கும் கூடுதல் அம்சங்களாக இணைந்துள்ளன.
அது மட்டுமல்ல, 6-வேக தானியங்கி கியா் பாக்ஸுகள், 5-வேக ஓட்டுநர் மாற்றும் வசதியையும் கொண்டுள்ளன.