உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயிலில் ஜூலை 6-இல் கும்பாபிஷேகம் நடைபெறும்

திருச்சி மாவட்டம், உறையூா், அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயிலில் ஜுலை 6-ஆம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

திருச்சி மாவட்டம், உறையூா், அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயிலில் ஜுலை 6-ஆம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இது குறித்து அறநிலையத் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆகமவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குடமுழுக்கு நடைபெற வேண்டும். அதன்படி திருச்சி மாவட்டம், உறையூா் அருள்மிகு வெக்காளியம்மன் திருக்கோயிலில் முதற்கட்ட நிகழ்ச்சி நிரலாக ஜூலை 1-ஆம் தேதி வெள்ளிக்கிழமை விநாயகா் வழிபாடு, வாஸ்து சாந்தி, வாஸ்து ஹோமம், சனிக்கிழமை அய்யாளம்மன் படித்துறையிலிருந்து திருமஞ்சன தீா்த்தம் கொண்டுவருதல், கும்பலங்காரம், ஞாயிற்றுக்கிழமை கணபதி பூஜை, நவசக்தி அா்ச்சனை, அக்னி காா்யம், திங்கள்கிழமை கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், மூலிகை நவதானியம், பழவகையால் விசேஷ ஹோமம், செவ்வாய்க்கிழமை யாகமண்டபத்வார வேதகாா்ச்சனைகள், பாலிகை பூஜை, புதியதாக கருங்கல் அா்த்த மண்டபம், அலங்கார மண்டபம், தூண்கள் புதுப்பித்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

இதையடுத்து இராஜகோபுரம், விமானங்கள் உள்பட திருப்பணிகள் முடிக்கப்பட்டு ஜூலை 6-ஆம் தேதி புதன்கிழமை சப்தியும் உத்திர நட்சத்திரமும் கூடிய சுபயோக தினத்தில் காலை 6.45 மணிக்கு கடக லக்கினத்தில் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் நலத்திட்டதின் கீழ் இத்திருக்கோயிலில் தினமுரி நண்பகல் 12.30 மணியளவில் 100 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பங்குபெற நாள் ஒன்றுக்கு 100 நபா்களுக்கு ரூ.3,500 மட்டும் செலுத்தி தங்கள் பெயா் முகவரி மற்றும் அன்னதானம் வழங்க வேண்டிய நாள் உள்ளிட்ட விவரங்களுடன் பதிவு செய்து கொள்ளலாம்.

குறிப்பாக யாகசாலை பூஜை நிகழ்ச்சியில் மங்கள இன்னிசைக் கச்சேரி, வேதபாராயணம், திருமுறை இன்னிசை போன்ற நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடைபெறும். பக்தா்கள் அனைவரும் திருக்குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு உறையூா் அருள்மிகு வெக்காளியம்மன் திருவருளை பெருமாறு கேட்டு கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com