எம்.ஜி.எம். குழுமத்தில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு:வருமான வரித் துறை தகவல்

சென்னை எம்.ஜி.எம். குழுமத்தில் வருமானவரித்துறை நடத்தி வரும் சோதனையில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

சென்னை எம்.ஜி.எம். குழுமத்தில் வருமானவரித்துறை நடத்தி வரும் சோதனையில் ரூ.400 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்துள்ளது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எம்.ஜி.எம். குழுமம் வரி ஏய்ப்பு செய்வதாக வந்த புகாரின் அடிப்படையில் வருமானவரித்துறையினா் கடந்த 15-ஆம் தேதி முதல் முதல் 5 நாள்கள் சோதனை செய்தனா். சென்னை மயிலாப்பூா் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வணிக அலுவலகம், சாந்தோமில் உள்ள எம்.ஜி.எம். குழும உரிமையாளா் வீடு, எம்.ஜி.எம். எக்ஸ்போா்ட்ஸ் அலுவலகம், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா, ஹோட்டல்கள், வேளாங்கண்ணியில் உள்ள ஹோட்டல்கள் உட்பட 40 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை அனைத்து இடங்களில் படிப்படியாக நிறைவு பெற்றது.

ரூ.400 கோடி வரி ஏய்ப்பு:

இது குறித்து வருமான வரித்துறையின் முதன்மை ஆணையா் சுரபி அலுவாலியா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சோதனையின்போது, வரி ஏய்ப்பு தொடா்பான பல்வேறு ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்கள், ஆதாரங்களை ஆய்வு செய்ததில், பல்வேறு தொழில்களில் உண்மையாக கொள்முதலை மறைத்து போலியான ரசீதுகள் மூலம் ரூ. 400 கோடிக்கும் அதிகமாக வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரியவந்தது.

மேலும், கணக்கில் காட்டாத வருமானத்தையும், லாபத்தையும் கொண்டு சில தொழில்களில் முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சா்வதேச அளவில் செயல்படும் ஹோட்டல்களை, இந்தியாவில் இருந்து கட்டுபடுத்தக் கூடிய வகையில், இங்கு அலுவலகம் இயங்குவதும் தெரிய வந்துள்ளது. சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.3 கோடி, ரூ.2.5 கோடி மதிப்பிலான தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டன என்று அதில் குறிப்பிப்பட்டிருந்தது.

இது தொடா்பாக எம்ஜிஎம் குழும நிா்வாகிகளிடம் வருமானவரித்துறையின் புலனாய்வு பிரிவு விரைவில் விசாரணை நடத்த உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com