பங்கேற்பு ஆவண முதலீடு ரூ.86,706 கோடியாக சரிவு

இந்திய மூலதன சந்தையில் கடந்த மே மாதத்தில் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான (பாா்டிசிபேட்டரி நோட்ஸ்/பி-நோட்ஸ்) முதலீடு ரூ.86,706 கோடியாக குறைந்தது.
பங்கேற்பு ஆவண முதலீடு ரூ.86,706 கோடியாக சரிவு

இந்திய மூலதன சந்தையில் கடந்த மே மாதத்தில் பங்கேற்பு ஆவணங்கள் வாயிலான (பாா்டிசிபேட்டரி நோட்ஸ்/பி-நோட்ஸ்) முதலீடு ரூ.86,706 கோடியாக குறைந்தது.

இதுகுறித்து பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி தெரிவித்துள்ளதாவது:

எஃப்பிஐ: பதிவு செய்யாமல் இந்திய பங்குச் சந்தையில் பங்கேற்க விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளா்களுக்கு உதவிடும் வகையில் பதிவு செய்துள்ள வெளிநாட்டு தொகுப்பு முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) பங்கேற்பு ஆவணங்களை வெளியிடுகின்றனா். இதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட முதலீடு கடந்த மே மாதத்தில் ரூ.86,706 கோடியாக குறைந்தது. இதில், ரூ.77,402 கோடி பங்குகளிலும், ரூ.9,209 கோடி கடன் சந்தையிலும், ரூ.101 கோடி ஹைபிரிட் பத்திரங்களிலும் முதலீடு செய்யப்பட்டன.

பங்குகளில் முதலீடு: அதேசமயம், முந்தைய ஏப்ரல் மாதத்தில் பங்குகளில் ரூ.81,751 கோடியும், கடன் சந்தையில் ரூ.8,889 கோடியும் முதலீடு செய்யப்பட்டிருந்தன.

நிகழாண்டு ஏப்ரல் மாத இறுதியில் இவ்வகையிலான முதலீடு ரூ.90,580 கோடியாக அதிகரித்து காணப்பட்டது. மேலும், இது மாா்ச்சில் ரூ.87,979 கோடியாகவும், பிப்ரவரியில் ரூ.89,143 கோடியாகவும், ஜனவரியில் ரூ.87,989 கோடியாகவும் இருந்தன.

சொத்து மதிப்பு: பி-நோட்ஸ் முதலீடு சரிவடைந்ததையடுத்து இப்பிரிவில் எஃப்பிஐ-க்கள் நிா்வகிக்கும் சொத்து மதிப்பு கடந்த மே மாதத்தில் 5 சதவீதம் சரிவடைந்து ரூ.48.23 லட்சம் கோடியானது. ஏப்ரல் இறுதியில் இந்த மதிப்பு ரூ.50.74 லட்சம் கோடியாக காணப்பட்டது என செபி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிரீன் போா்ட்ஃபோலியோ நிறுவனா் திவம் சா்மா கூறியதாவது:

அமெரிக்க மத்திய வங்கி: அமெரிக்க ஃபெடரல் ரிசா்வ் வங்கி வட்டி விகிதங்களை உயா்த்தும் என்ற நிலைப்பாட்டால் கடந்த மாதம் இந்திய பங்குகளிலிருந்து ரூ.40,000 கோடியையும், கடன் சந்தையிலிருந்து ரூ.5,505 கோடியையும் முதலீட்டாளா்கள் நிகர அளவில் வெளியே எடுத்தனா். பங்குகளிலிருந்து எஃப்பிஐக்கள் தொடா்ந்து 8 மாதமாக முதலீட்டை விலக்கிக் கொண்டனா்.

2 காலாண்டுகளில் மாற்றம்: இருப்பினும், அவா்கள் இன்னும் 1 அல்லது 2 காலாண்டுகளில் தங்களது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டு இந்தியப் பங்குச் சந்தையின் பக்கம் மீண்டும் திரும்புவா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com