20 அங்குலத்தில் மடிக்கக்கூடிய ஆப்பிளின் புதிய ஸ்மார்ட் சாதனம்!

ஆப்பிள் நிறுவனம் 20 அங்குலத்தில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஒரு ஸ்மார்ட் சாதனத்தை தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
20 அங்குலத்தில் மடிக்கக்கூடிய ஆப்பிளின் புதிய ஸ்மார்ட் சாதனம்!

ஆப்பிள் நிறுவனம் 20 அங்குலத்தில் டிஸ்ப்ளே கொண்ட மடிக்கக்கூடிய ஒரு ஸ்மார்ட் சாதனத்தை தயாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, இது 2026க்குள் சந்தைக்கு வரலாம், 'ஐபாட்/மேக்புக் ஹைப்ரிட்'ஆக இது இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இரண்டு டிஸ்பிளே கொண்டதாகவும் அதில் ஒன்று சாதாரண கீபோர்டாகவும் மற்றொன்று ட்ராக்பேடாகவும் இருக்கும் என்று தெரிகிறது. 

தற்போது மடிக்கக்கூடிய மடிக்கணினியான லெனோவாவின் திங்க்பேட் X1 ஃபோல்டில் 13-இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. எனவே, அதற்கு மேலாக 20 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட் சாதனத்தை ஆப்பிள் தயாரித்து வருகிறது. இதற்காக அனைத்துவகை மேக்புக்குகளையும் ஆய்வு செய்து வருகிறது. 

மடிக்கக்கூடிய ஸ்மார்ட் சாதனைகளை இதுவரை வெளியிடாத ஆப்பிள் நிறுவனம் தற்போது அதில் கவனம் செலுத்தி வருகிறது. 

ஆப்பிள் ஐபோன் 14 சீரிஸ், எம்2 சிப்செட், எம்2 சிப்செட் மூலம் இயங்கும் மேக்புக்ஸ், எம்1 ப்ரோ அல்லது எம்1 மேக்ஸ் செயலியுடன் கூடிய 27 இன்ச் ஐமேக் ப்ரோ மற்றும் புதிய மேக் மினி உள்ளிட்ட பல புதிய தயாரிப்புகளை ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு அறிமுகப்படுத்த உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com