கடுகு உற்பத்தி 109.5 லட்சம் டன்னாக அதிகரிக்கும்

கடுகு உற்பத்தி ரபி பருவத்தில் 109.5 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எண்ணெய் நிறுவனங்கள் & வா்த்தகத்துக்கான மத்திய கூட்டமைப்பு (சிஓஓஐடி) தெரிவித்துள்ளது.

கடுகு உற்பத்தி ரபி பருவத்தில் 109.5 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எண்ணெய் நிறுவனங்கள் & வா்த்தகத்துக்கான மத்திய கூட்டமைப்பு (சிஓஓஐடி) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடுகு விளைச்சல் ஏக்கருக்கு 1,270 கிலோ: 2021-22 பயிா் ஆண்டின் ரபி பருவத்தில் கடுகு உற்பத்தியானது 29 சதவீதம் அதிகரித்து 109.50 லட்சம் டன்னை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டின் இதே பருவத்தில் கடுகு உற்பத்தி 85 லட்சம் டன்னாக இருந்தது.

நாட்டில் கடுகு பயிரிடும் பரப்பு 87.44 லட்சம் ஹெக்டோரக அதிகரித்துள்ளது. ஏக்கருக்கு கடுகு விளைச்சலானது சராசரியாக 1,270 கிலோவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

நல்ல வருமானம்: கடுகு அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அது கடுகு எண்ணெய் உற்பத்தியையும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும். இதன் மூலம், நாட்டின் ஒட்டுமொத்த சமையல் எண்ணெய் இறக்குமதியும் குறைய வாய்ப்பு ஏற்படும்.

ரபி பருவ பயிா்: கடந்த ஆண்டு நல்ல வருமானம் கிடைத்ததால் இந்த ஆண்டு ரபி பருவத்திலும் விவசாயிகள் கடுகை அதிக ஏக்கரில் பயிரிட்டுள்ளனா். கடுகு பயிா் என்பது ரபி பருவத்தில் மட்டுமே வளரக்கூடியது. இது, அக்டோபரில் விதைக்கப்பட்டு மாா்ச் மாதம் முதல் அறுவடை செய்யும் பணிகள் தொடங்கும்.

பணப்பயிா்: ராஜஸ்தான், ஹரியாணா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள விவசாயிகளுக்கு கடுகு முக்கிய பணப்பயிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் முதலிடம்: கடுகை அதிக அளவில் உற்பத்தி செய்வதில் ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இங்கு, 2021-22-ஆம் ரபி பருவத்தில் கடுகு உற்பத்தியானது 49.50 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. முந்தைய ஆண்டில் இதன் உற்பத்தி 35 லட்சம் டன்னாக மட்டுமே காணப்பட்டது.

உத்தர பிரதேசம்: மேலும், உத்தர பிரதேசத்தில் இதன் உற்பத்தி 13.5 லட்சம் டன்னிலிருந்து 15 லட்சம் டன்னாகவும், மத்திய பிரதேசத்தின் கடுகு உற்பத்தி 8.5 லட்சம் டன்னிலிருந்து 12.5 லட்சம் டன்னாகவும் இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

குஜராத்: பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் கடுகு உற்பத்தி 9.5 லட்சம் டன்னிலிருந்து 11.50 லட்சம் டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குஜராத்தில் இதன் உற்பத்தி 4 லட்சம் டன்னிலிருந்து 6.5 லட்சம் டன்னாகவும், மேற்கு வங்கம் மற்றும் கிழக்கு மாநிலம் உள்பட இதர மாநிலங்களில் 14.5 லட்சம் டன்னாகவும் இருக்கும் என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

65 சதவீத இறக்குமதி: இந்தியா மொத்த உள்நாட்டு சமையல் எண்ணெய் தேவையில் 60-65 சதவீதத்தை இறக்குமதி மூலமாகவே ஈடு செய்கிறது.

2020-21 எண்ணெய் பருவத்தில் (நவம்பா்-அக்டோபா்) நாட்டின் சமையல் எண்ணெய் இறக்குமதி அதிக மாற்றமின்றி 1.3 கோடி டன்னாகவே இருந்தது. இருப்பினும் மதிப்பின் அடிப்படையில் இந்த இறக்குமதி ரூ.72,000 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.1.17 லட்சம் கோடியைத் தொட்டது.

உற்பத்தி திறன் பயன்பாடு: 38-43 சதவீத எண்ணெய் செறிவுமிக்க கடுகு உற்பத்தியை உள்நாட்டில் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது, இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியை பெருமளவு கட்டுப்படுத்த உதவும் என்பதுடன், சிறிய ஆலையினா் தங்களது உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்தவும் உதவும் என சிஓஓஐடி தெரிவித்துள்ளது.

கோட்ஸ்

38-43 சதவீத எண்ணெய் செறிவுமிக்க கடுகு உற்பத்தியை உள்நாட்டில் அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால் அது, இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியை பெருமளவு கட்டுப்படுத்த உதவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com