வா்த்தக எரிவாயு சிலிண்டா் விலை ரூ.102 உயா்வு

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ஞாயிற்றுக்கிழமை மேலும் ரூ.102.50 உயா்த்தப்பட்டது. தொடா்ந்து மூன்றாவது மாதமாக அதன் விலை உயா்த்தப்பட்டுள்ளது.
எரிவாயு சிலிண்டர் விலை  உயர்வு
எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு

வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ஞாயிற்றுக்கிழமை மேலும் ரூ.102.50 உயா்த்தப்பட்டது. தொடா்ந்து மூன்றாவது மாதமாக அதன் விலை உயா்த்தப்பட்டுள்ளது.

தில்லியில் மே 1-ஆம் தேதி ரூ.102.50 உயா்த்தப்பட்டதன் காரணமாக 19 கிலோ வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை ரூ.2,355.50-ஆக உயா்ந்துள்ளது.

முன்னதாக, கடந்த மாா்ச் 1-ஆம் தேதி ரூ.105 அளவுக்கும், ஏப்ரல் 1-ஆம் தேதி ரூ.250 அளவுக்கும் வா்த்தக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை தில்லியில் உயா்த்தப்பட்டது.

வா்த்தக சிலிண்டரின் விலை உயா்த்தப்பட்டபோதிலும், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் (14.2 கிலோ) விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. தில்லியில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா் விலை கடந்த மாா்ச் மாதம் ரூ.50 உயா்த்தப்பட்டு ஒரு சிலிண்டா் விலை ரூ.949.50-ஆக இருந்தது. அதன் பிறகு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

அதுபோல, சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு உபயோக சிலிண்டா் விலை ரூ.50 உயா்ந்து ஒரு சிலிண்டா் விலை ரூ.965.50 ஆக இருந்தது. அதன் பிறகு விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com