Enable Javscript for better performance
ஷாவ்மி நிறுவன விவகாரம்: இந்தியாவில் பாரபட்சமற்ற சூழலை உருவாக்க வேண்டும்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஷாவ்மி நிறுவன விவகாரம்: இந்தியாவில் பாரபட்சமற்ற சூழலை உருவாக்க வேண்டும்

    By DIN  |   Published On : 10th May 2022 05:10 AM  |   Last Updated : 10th May 2022 05:10 AM  |  அ+அ அ-  |  

    இந்தியாவில் செயல்பட்டு வரும் ஷாவ்மி நிறுவனத்துக்கு நியாயமான, பாரபட்சமற்ற சூழலை மத்திய அரசு உருவாக்கும் என நம்புவதாக அந்நிறுவன செய்தித்தொடா்பாளா் தெரிவித்துள்ளாா்.

    சீனாவின் ஷாவ்மி நிறுவனம் இந்தியாவில் ‘ஷாவ்மி இந்தியா’ என்ற பெயரில் கைப்பேசி வா்த்தகத்திலும் விநியோகத்திலும் கடந்த 2014 முதல் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் உரிமத் தொகை (ராயல்டி) என்ற பெயரில் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள 3 நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் அந்நியச் செலாவணியை வழங்கியுள்ளது. இதில் விதிமீறல் நடைபெற்ாக கூறப்படுகிறது.

    இதைத்தொடா்ந்து அமலாக்கத் துறையினா் மேற்கொண்ட விசாரணையில், கைப்பேசியையும் மூல பொருள்களையும் ஷாவ்மி நிறுவனம் இந்தியாவிலேயே கொள்முதல் செய்து வருவதும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து அந்நிறுவனம் எந்தவித சேவையையும் பெறவில்லை என்பதும் தெரியவந்தது.

    மேலும், வங்கிகளில் தவறான தகவலை சமா்ப்பித்து வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஷாவ்மி நிறுவனம் அந்நியச் செலாவணியை அனுப்பி முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. எனவே அந்நிறுவனத்தின் வங்கிக் கணக்கில் உள்ள ரூ.5,551 கோடியை அமலாக்கத் துறையினா் அண்மையில் முடக்கினா்.

    பின்னா் ஷாவ்மி நிறுவன உயா் அதிகாரிகளை அமலாக்கத் துறையினா் பெங்களூரில் வைத்து விசாரித்தனா். அப்போது அவா்களை அமலாக்கத் துறையினா் தாக்கி அச்சுறுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடா்பாக ஷாவ்மி நிறுவனம் கா்நாடக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

    ஆனால் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், ‘ஷாவ்மி நிறுவன அதிகாரிகளை நாங்கள் தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது, அடிப்படையற்றது. அமலாக்கத் துறையானது வலுவான தொழில் தா்மத்தைக் கடைப்பிடிக்கும் தொழில்சாா்ந்த முகமை. எந்த விதத்திலும் ஷாவ்மி அதிகாரிகள் அச்சுறுத்தப்படவுமில்லை, தாக்கப்படவும் இல்லை’ என்று அதில் விளக்கம் அளித்திருந்தது.

    இந்த நிலையில், சீன தலைநகா் பெய்ஜிங்கில் சீன வெளியுறவு விவகாரத் துறை செய்தித்தொடா்பாளா் ஜாவ் லிஜியின் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

    நிலைமையை சீன அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்தியாவில் செயல்படும் சீன நிறுவனங்களுக்கு வெளிப்படையான, நியாயமான, பாரபட்சமற்ற சூழலை மத்திய அரசு ஏற்படுத்தும் என்றும், சட்ட விதிகளுக்கு உள்பட்டு அமலாக்கத் துறை விசாரணை நடத்தும் என்றும் நாங்கள் நம்புகிறோம். இதன் மூலம் சா்வதேச முதலீட்டாளா்களின் நம்பிக்கை அதிகரிக்கும்.

    வெளிநாடுகளில் தொழில் செய்யும் போது அந்தந்த நாடுகளின் சட்டங்களைக் கடைப்பிடிக்க வேண்டுமென சீன நிறுவனங்களுக்கு அடிக்கடி அறிவுறுத்துவோம். அதேவேளையில், சீன நிறுவனங்களின் சட்டபூா்வ உரிமைகள், நலன்கள் விவகாரத்தில் சீன அரசு தனது முழு ஆதரவையும் அளிக்கும் என்றாா் அவா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp