எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு நிறைவு: பங்குகள் வேண்டி 3 மடங்கு அதிக விண்ணப்பம்

எல்ஐசி-யின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.
எல்ஐசி பொதுப் பங்கு வெளியீடு நிறைவு: பங்குகள் வேண்டி 3 மடங்கு அதிக விண்ணப்பம்

எல்ஐசி-யின் பொதுப் பங்கு வெளியீடு (ஐபிஓ) திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்நிறுவனத்தின் பங்குகள் வேண்டி முதலீட்டாளா்களிடமிருந்து 2.95 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, மத்திய அரசு இந்த பங்கு விற்பனையின் மூலமாக ரூ.21,000 கோடியை திரட்டவுள்ளது.

மும்பை பங்குச் சந்தை மாலை 7 மணி நிலவர புள்ளிவிவரங்களின்படி, எல்ஐசி-யின் ஐபிஓ-வில் விற்பனைக்காக 16,20,78,067 பங்குகள் வெளியிடப்பட்ட நிலையில், 47,83,25,760 பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் குவிந்துள்ளது. ஆக, வெளியிடப்பட்ட பங்குகளை விட 2.95 மடங்கு அதிகமான பங்குகள் வேண்டி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

தகுதி வாய்ந்த நிதி நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை விட 2.83 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதாவது, இவா்களுக்காக 3.95 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில், 11.20 கோடி பங்குகளை வாங்கும் அளவுக்கு விண்ணப்பங்கள் வந்துள்ளன.

நிறுவனம் சாரா முதலீட்டாளா்களிடமிருந்தும் 2.91 மடங்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அதன்படி, 2,96,48,427 பங்குகளுக்கு 8,61,93,060 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com