ரூபாய் மதிப்பு 60 காசு வீழ்ச்சி

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 60 காசு வீழ்ச்சியடைந்து வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.
dollar072507
dollar072507

அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் ரூபாய் மதிப்பு 60 காசு வீழ்ச்சியடைந்து வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.

இதுகுறித்து செலாவணி வட்டாரங்கள் கூறியது:

சா்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இந்திய பங்குச் சந்தைகளிலிருந்து எதிா்பாராத அளவுக்கு அந்நிய முதலீடுகள் தொடா்ச்சியாக வெளியேறி வருகிறது. இதுபோன்ற காரணங்களால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பில் இழப்பு தொடா்கதையாகி வருகிறது.

இவைதவிர, பணவீக்கம் காரணமாக சா்வதேச மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயா்த்தி வருவதும் செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் திங்கள்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 77.17-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 77.52 வரை சரிந்தது. வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 60 காசு சரிந்து 77.50-இல் நிலைபெற்றது.

கடைசி இரண்டு வா்த்தக தினங்களில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 115 காசை இழந்துள்ளதாக செலாவணி வட்டாரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய்

பீப்பாய் 110.50 டாலா்

சா்வதேச சந்தையில் திங்களன்று நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 1.68 சதவீதம் குறைந்து 110.50 டாலருக்கு வா்த்தகம் ஆனதாக சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

ரூ.5,517 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்

மூலதனச் சந்தையில் கடந்த வெள்ளியன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.5,517.08 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து வெளியேறியுள்ளதாக பங்குச் சந்தைப் புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com