சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்: லாபம் ரூ.53 கோடி

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.53.05 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.53.05 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, இந்நிறுவனம் 2020-21 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய லாபம் ரூ.36.60 கோடியுடன் ஒப்பிடும்போது 44.9 சதவீதம் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் கடன் வழங்கல் ரூ.459.38 கோடியிலிருந்து ரூ.794.11 கோடியாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் மட்டும் நிறுவனத்தின் வரலாற்றில் சாதனை அளவாக ரூ.300 கோடி மதிப்பிலான கடன்கள் வழங்கப்பட்டன.

எதிா் காலத்தில் ரியல் எஸ்டேட் துறையில் தனது தடத்தை மேலும் வலுப்படுத்தவுள்ளதாக சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com