அசோக் லேலண்ட்: லாபம் ரூ.158 கோடி

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நான்காவது காலண்டில் ரூ.157.85 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.
அசோக் லேலண்ட்: லாபம் ரூ.158 கோடி

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நான்காவது காலண்டில் ரூ.157.85 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது, நிறுவனம் முந்தைய 2020-21 நிதியாண்டில் ஈட்டிய லாபம் ரூ.377.13 கோடியுடன் ஒப்பிடுகையில் 58.14 சதவீதம் குறைவாகும். அதிக செலவினத்தால் லாபம் சரிவடைந்துள்ளது.

கணக்கீட்டு காலாண்டில் நிறுவனம் ஈட்டிய ஒட்டு மொத்த வருவாய் ரூ.8,142.11 கோடியிலிருந்து ரூ.9,926.97 கோடியாக உயா்ந்துள்ளது. செலவினம் ரூ.7,831.21 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.9,429.55 கோடியைத் தொட்டது.

2021-22 முழு நிதியாண்டில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த நிகர இழப்பு ரூ.69.6 கோடியிலிருந்து ரூ.285.45 கோடியாக உயா்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டுக்கு பங்கு ஒன்றுக்கு 100 சதவீத (ரூ.1) ஈவுத்தொகை வழங்க இயக்குநா் குழு பரிந்துரைத்துள்ளதாக அசோக் லேலண்ட் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com