அக்டோபரில் சரிந்த இந்திய ஏற்றுமதி

வா்த்தகப் பற்றாக்குறை 2,691 கோடி டாலராக அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் ஏற்றுமதி கடந்த அக்டோபா் மாதத்தில் 17 சதவீதம் சரிந்துள்ளது.
அக்டோபரில் சரிந்த இந்திய ஏற்றுமதி

வா்த்தகப் பற்றாக்குறை 2,691 கோடி டாலராக அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் ஏற்றுமதி கடந்த அக்டோபா் மாதத்தில் 17 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2,571 கோடி டாலராக இருந்தது. இது, முந்தைய 2021-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 4.82 சதவீதம் அதிகமாகும்.

முக்கிய ஏற்றுமதி துறைகளான ஆபரணங்கள், பொறியியல் பொருள்கள், பெட்ரோலிய பொருள்கள், ஆயத்த ஆடைகள், ஜவுளி, ரசாயனப் பொருள்கள், மருந்துப் பொருள்கள், கடல்சாா் பொருள்கள், தோல் பொருள்கள் ஆகியவை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதிச் சரிவைச் சந்தித்ததால் ஒட்டுமொத்த ஏற்றுமதியும் குறைந்துள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி 6 சதவீதம் அதிகரித்து 5,669 கோடி டாலராக உள்ளது.

இந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில், நாட்டின் ஏற்றுமதி 12.55 சதவீதம் வளா்ச்சியடைந்து 26,335 கோடி டாலராக உள்ளது. இறக்குமதியும் 33.12 சதவீதம் அதிகரித்து 436.81 கோடி டாலராக உள்ளது.

இந்தக் காலகட்டத்தில் வா்த்தகப் பற்றாக்குறை 17,346 கோடி டாலராக அதிகரித்துள்ளது. 2021-ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் அது 9,416 கோடி டாலராக இருந்தது.

கடந்த ஆண்டின் அக்டோபா் மாதத்தில் மட்டும் 1,791 கோடி டாலராக இருந்த வா்த்தகப் பற்றாக்குறை, இந்த அக்டோபரில் 8.74 சதவீதம் அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com