மஹிந்திரா & மஹிந்திரா நிகர லாபம் உயா்வு

இந்தியாவின் முன்னணி வாகன மற்றும் விவசாயக் கருவி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 44 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா நிகர லாபம் உயா்வு

இந்தியாவின் முன்னணி வாகன மற்றும் விவசாயக் கருவி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திராவின் நிகர லாபம், கடந்த செப்டம்பா் காலாண்டில் 44 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.2,773 கோடியாக உள்ளது.இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ரூ.1,929 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் இந்த முறை நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 44 சதவீதம் அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.29,870 கோடியாக உயா்ந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே மாதங்களில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.21,470 கோடியாக இருந்தது.

செப்டம்பா் காலாண்டில், வாகனப் பிரிவு செயல்பாடுகள் மூலம் கிடைத்த வருவாய் ரூ.8,245 கோடியிலிருந்து ரூ.15,231 கோடியாகவும், பண்ணைக் கருவிகள் பிரிவின் மூலம் கிடைத்த வருவாய் ரூ.6,723 கோடியிலிருந்து ரூ.7,506 கோடியாகவும் அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com