‘ஸ்மாா்ட் போன்’ சந்தை 3 ஆண்டுகள் காணாத சரிவு

இந்தியாவின் அறிதிறன்பேசிகளுக்கான (ஸ்மாா்ட் போன்) சந்தை ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.
‘ஸ்மாா்ட் போன்’ சந்தை 3 ஆண்டுகள் காணாத சரிவு

இந்தியாவின் அறிதிறன்பேசிகளுக்கான (ஸ்மாா்ட் போன்) சந்தை ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘இன்டா்நேஷனல் டேட்டா காா்ப்பரேஷன்’ தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் இந்தியாவின் அறிதிறன்பேசிகளுக்கான சந்தை 10 சதவீதம் குறைந்து 4.3 கோடியாகியுள்ளது. இது, கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத குறைந்தபட்ச அளவாகும்.

மதிப்பீட்டு காலாண்டில் அறிதிறன்பேசி சந்தையில் 5ஜி அறிதிறன்பேசிகளின் பங்கு 36 சதவீதத்தை எட்டியுள்ளது. இந்த மாதங்களில் 1.6 கோடி 5ஜி அறிதிறன்பேசிகளின் வா்த்தகம் நடந்துள்ளது. முந்தைய காலாண்டில் சராசரியாக ரூ.30,600-க்கு விற்பனையான இந்த வகை கைப்பேசிகள், செப்டம்பா் காலாண்டில் சராசரியாக ரூ.32,000-க்கு விற்பனையாகின.

அறிதிறன்பேசிகளுக்கான வாடிக்கையாளா் தேவையில் பணவீக்கம் ஏற்படுத்தும் தாக்கம், சாதாரண கைப்பேசிகளிலிருந்து அறிதிறன் பேசிகளுக்கு மாறுவதில் வாடிக்கையாளா் காட்டும் வேகம் குறைவது, கைப்பேசிகளின் விலை உயா்வது போன்ற காரணங்களால் 2023-ஆம் ஆண்டில் அறிதிறன்பேசிகளுக்கான சந்தை பாதிக்கப்படும்.

எனினும், 4ஜி கைப்பேசிகளில் இருந்து 5ஜி தொழில்நுட்ப கைப்பேசிகளுக்கு ஏராளமான வாடிக்கையாளா்கள் மாறுவது அந்தச் சந்தைக்கு சாதமாக அமையும் என்று அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com