பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவு

இந்திய பங்குச் சந்தை வணிகத்தில் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தது. 
பங்குச் சந்தை வணிகம் உயர்வுடன் நிறைவு

மும்பை: இந்திய பங்குச் சந்தை வணிகத்தில் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிவடைந்தது. 

மும்பை பங்குச் சந்தையில் இன்றைய சென்செக்ஸ் 549.62 புள்ளிகள் உயர்ந்து 58,960.60-ல் நிலைத்தது. அதேபோல், தேசிய பங்குச் சந்தை 175.15 புள்ளிகள் உயர்ந்து 17,486.95 இல் முடிந்தது.

இன்றைய வர்த்தகத்தில் பாரத ஸ்டேட் வங்கி 3.41 சதவீதம் உயர்ந்தது, ஐடிசி, நெஸ்லே இந்தியா, பார்தி ஏர்டெல், இண்டஸ்இண்ட் வங்கி, எல்&டி, எம்&எம் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தொடர்ந்தன. அதே போல் ஹெச்டிஎஃப்சி, என்டிபிசி, டெக் மஹிந்திரா, சன் பார்மா மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய ஐந்து நிறுவனங்கள் 0.72 சதவீதம் வரை சரிந்தது வர்த்தகமானது.

குறிப்பாக, செப்டம்பரில் பணவீக்கம் உச்சத்தை எட்டிய நிலையில், இனிமேல் குறையும் என்று ரிசர்வ் வங்கியின் நம்பிக்கை தெரிவித்த நிலையில், அந்த செய்தி மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டது என்று ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் ஆராய்ச்சித் தலைவர் வினோத் நாயர் தெரிவித்தார்.

ரிலிகேர் புரோக்கிங் லிமிடெட் ஆராய்ச்சியின் துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா கூறுகையில், சந்தைகளில் சமீபத்திய எழுச்சிக்கு உலகளாவிய குறியீடுகளின் வளர்ச்சி காரணமாக இருக்கலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com