மெட்டா நிறுவனத்தின் ‘கிரியேட்டர் டே’: சென்னை விழாவில் நடிகை தமன்னா பங்கேற்பு

மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் செயலிக்கான கிரியேட்டர் டே-ஐ சென்னையில் வியாழக்கிழமை கொண்டாடியது.
மெட்டா நிறுவனத்தின் ‘கிரியேட்டர் டே’: சென்னை விழாவில் நடிகை தமன்னா பங்கேற்பு

மெட்டா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் செயலிக்கான கிரியேட்டர் டே-ஐ சென்னையில் வியாழக்கிழமை கொண்டாடியது.

பொழுதுபோக்கு, நடிப்பு, இசை, கலை என பல்வேறு பிரிவுகளின் கீழ் விடியோக்களை வெளியிடும் அதிக பயனர்களைக் கொண்ட 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் ரீல்ஸ் விடியோக்களை பதிவேற்றம் செய்யும் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மெட்டா நிறுவனம் இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் ‘கிரியேட்டர் டே’ என்ற பெயரில் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

ஏற்கெனவே மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய நகரங்களில் நடந்து முடிந்துள்ள இந்த நிகழ்ச்சியானது இன்று (வியாழக்கிழமை) சென்னையிலும் நடைபெற்றது.
 
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் விடியோ படைப்பாளர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து பேசுவதற்கான வாய்ப்பாக வடிவமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் நடிகை தமன்னா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.ரீல்ஸ் விடியோக்கள் உருவாக்கும் விதம், விடியோக்களைத் தயாரிப்பதன் மூலம் விளம்பரங்களை ஈர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்து படைப்பாளர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இதுதொடர்பாக மெட்டா பாட்னர்ஷிப்ஸ் இயக்குநரும், தலைவருமான மணீஷ்  சோப்ரா பேசுகையில், “நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் ரீல்ஸில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க | சர்தார் வசூல் எவ்வளவு?

அதனை அங்கீகரிக்கும் விதமாகவே இந்தாண்டு நாட்டின் பல்வேறு நகரங்களில் படைப்பாளர் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். உள்ளூரில் தயாராகும் இசை, நடனம், நடிப்பு போன்றவை உலகின் மற்ற நாடுகளையும் சென்றடைந்து வைரலாகின்றன. தமிழ்ப் பாடலான அரபிக் குத்து பாடல் கூட உலக அளவில் வைரலானது. இதனால் ரீல்ஸ் விடியோக்களை அதிகளவில் உண்டாக்க முயற்சித்து வருகிறோம்” என்றார் மணீஷ் சோப்ரா.

இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய நடிகை தமன்னா, “சமூக ஊடகப் படைப்பாளிகள் தங்கள் திறமை மற்றும் கடின உழைப்பின் மூலம் புதிய பொழுதுபோக்கு கலாச்சாரத்தை உருவாக்குகின்றனர்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் ரீல்ஸ் விடியோக்களை பார்ப்பதன் மூலம் எனக்கும் இதுபோல செய்ய வேண்டும் என உற்சாகம் ஏற்படுகிறது. இந்த நாளை உங்களுடன் சேர்ந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் சமூக ஊடகப் பிரபலங்களான மதன் கெளரி, ஆதித்யா ஆர்கே, ரிடா தரனா, மபுஷெரிப், ஓய் கேமிங், சைதன்யா பிரகாஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com