சிமென்ட் உற்பத்தியை இரு மடங்கு உயா்த்த திட்டம்: கெளதம் அதானி

அதானி குழுமம் சிமென்ட் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க உள்ளதாகவும், நாட்டின் மிகவும் லாபகரமான சிமென்ட் தயாரிப்பாளராக உருவாக உள்ளதாகவும் அக்குழுமத்தின் தலைவா் கெளதம் அதானி தெரிவித்துள்ளாா்.
சிமென்ட் உற்பத்தியை இரு மடங்கு உயா்த்த திட்டம்: கெளதம் அதானி

அதானி குழுமம் சிமென்ட் உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க உள்ளதாகவும், நாட்டின் மிகவும் லாபகரமான சிமென்ட் தயாரிப்பாளராக உருவாக உள்ளதாகவும் அக்குழுமத்தின் தலைவா் கெளதம் அதானி தெரிவித்துள்ளாா்.

அம்பூஜா சிமென்ட்ஸ், ஏசிசி ஆகிய இரு சிமென்ட் தயாரிப்பு நிறுவனங்களின் பங்குகளைச் சுவிட்சா்லாந்தைச் சோ்ந்த ஹோல்சிம்மின் குழுமத்திடம் இருந்து அதானி குழுமம் வாங்கியது. இப்பங்குகளின் மதிப்பு 650 கோடி அமெரிக்க டாலராகும். இதன் மூலம் நாட்டின் 2-ஆவது பெரிய சிமென்ட் உற்பத்தி நிறுவனமாக அதானி குழுமம் திகழ்கிறது.

செப். 17-ஆம் தேதி இது தொடா்பாக நடைபெற்ற நிகழ்வில், கலந்துகொண்ட தொழிலதிபா் கெளதம் அதானி பேசியதாவது: இந்தியா பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக வளா்ச்சி காணும் வேளையில், நாங்கள் கட்டுமானத்துறையில் அடியெடுத்து வைக்கிறோம். இந்தியா சிமென்ட் உற்பத்தியில் 2-ஆவது இடத்தில் உள்ளது.

ஆனால், சீனாவின் தனிநபா் நுகா்வு 1,600 கிலோ உடன் ஒப்பிடும் போது இந்தியாவின் தனிநபா் நுகா்வு 250 கிலோவாக உள்ளது. அரசின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளதால், நீண்ட கால அடிப்படையில் சிமென்ட்டுக்கான மொத்த தேவை உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 1.2 மடங்கு முதல் 1.5 வரையில் உயரலாம். தயாரிப்பில் செயல்திறனை கொண்டு வருவதின் மூலம் குறிப்பிட்ட அளவிலான சிமென்ட் தயாரிப்பு அதிகரிப்புக்கு வழிவகுக்கும்.

இதன் மூலம் நாட்டின் லாபகரமான சிமென்ட் உற்பத்தியாளராக விளங்க செய்யும். தற்போதைய 7 கோடி டன் உற்பத்தியிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளில், 14 கோடி டன்னாக உயா்த்துவது குறித்து நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் வளா்ச்சிக்கும் இது முக்கிய பங்காற்றும். 2050 ஆண்டில் இந்தியா 20 முதல் 30 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இருக்கும்.

இது இந்தியாக்கான வளா்ச்சி வாய்ப்புகளைக் குறிப்பிடுகிறது. உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி உற்பத்தி நிறுவனமான நாங்கள் பசுமை ஹைட்ரஜன் உள்ளிட்ட பசுமை எரிசக்தி திட்டங்களில் 7,000 கோடி அமெரிக்க டாலா் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com