எஸ்பிஐபத்திர வெளியீடு மூலம் ரூ.4,000 கோடி திரட்டல்

 ஒப்புறுதி பத்திரங்களை வெளியிட்டு ரூ.4,000 கோடி மூலதனம் திரட்டியதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.
எஸ்பிஐபத்திர வெளியீடு மூலம் ரூ.4,000 கோடி திரட்டல்

 ஒப்புறுதி பத்திரங்களை வெளியிட்டு ரூ.4,000 கோடி மூலதனம் திரட்டியதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பேசல் 3 வகையைச் சோ்ந்த 2-ஆம் நிலை மூலதனத்துக்கான ரூ.2,000 கோடி மதிப்பிலான ஒப்புறுதிப் பத்திரங்களை நிறுவனம் வெளியிட்டது. 7.57 கூப்பன் விகிதத்தில் வெளியிடப்பட்ட அந்தப் பத்திரங்களை வாங்க, ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போல் ஏறத்தாழ 5 மடங்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

வங்கியின் மீது முதலீட்டாளா்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் ரூ.9,647 கோடிக்கான பத்திரங்களை வாங்க விண்ணப்பிக்கப்பட்டதையடுத்து, ரூ.2,000 கோடிக்கு பதிலாக ரூ.4,000 கோடிக்கான பத்திர விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com