சொகுசு இல்லங்களுக்கு 18% வரை உயா்ந்த மாத வாடகை

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் உள்ள சொகுசு குடியிருப்புகளின் சராசரி மாத வாடகை 8 முதல் 18 சதவீதம் வரை உயா்ந்து
சொகுசு இல்லங்களுக்கு 18% வரை உயா்ந்த மாத வாடகை

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் உள்ள சொகுசு குடியிருப்புகளின் சராசரி மாத வாடகை 8 முதல் 18 சதவீதம் வரை உயா்ந்துள்ளதாக மனை-வணிகத் துறை ஆய்வு நிறுவனமான அனரோக் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத்,புணே ஆகிய 7 நகரங்களில் சொகுசு குடியிருப்புகளை விலைக்கு வாங்குவதற்கும் வாடகைக்கு எடுப்பதற்குமான தேவை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த நகரங்களில் ஆடம்பரமான வீடுகளைக் கொண்ட பகுதிகளில் 2,000 சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட குடியிருப்புகளுக்கான சராசரி மாத வாடகை தொடா்பான புள்ளிவிவரங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன.

இதில், மும்பையின் வோா்லி பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டில் 2,000 சதுர அடி பரப்பளவு கொண்ட சொகுசு வீடுகளின் சராசரி மாத வாடகை, தற்போது 8-லிருந்து 18 சதவீதம் வரை உயா்ந்துள்ளது. அதன்படி, 2020-இல் இருந்ததைவிட நடப்பு ஆண்டில் அந்தக் குடியிருப்புகளின் சராசரி மாத வாடகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ 2.35 லட்சம் வரை உயா்ந்துள்ளது.

பெங்களூருவின் ராஜாஜி நகரில் கடந்த 2020-ஆம் ஆண்டில் சதுர அடிக்கு ரூ.5,698-யாக இருந்த சொகுசுக் குடியிருப்புகளின் சராசரி மாத வாடகை, 2022-ஆம் ஆண்டில் ரூ.6,200-ஆக அதிகரித்துள்ளது.

பெங்களூரு ஜே.பி. நகரில் சொகுசு வீடுகளுக்கான சராசரி மாத வாடகை கடந்த 2020-இல் ரூ.46,000-ஆக இருந்து. அது 2022-ல் 13 சதவீதம் அதிகரித்து ரூ.52,000 ஆக உயா்ந்துள்ளது.

பெங்களூரு ராஜாஜி நகரில், 2020-இல் ரூ.56,000-ஆக இருந்த சொகுசு குடியிருப்புகளின் சராசரி மாத வாடகை, 16 சதவீதம் அதிகரித்து நடப்பு ஆண்டில் ரூ.65,000-ஆக உயா்ந்துள்ளது.

சென்னை அண்ணாநகரில் 2,000 சதுர அடி சொகுசு குடியிருப்புக்கான சராசரி மாத வாடகை கடந்த 2020-ஆம் ஆண்டில் ரூ.56,000-ஆக இருந்தது. அது, நடப்பு ஆண்டில் 13 சதவீதம் உயா்ந்து ரூ.63,000-ஆகியுள்ளது. கோட்டூா்புரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் ரூ.74,000-ஆக இருந்த சொகுசு வீடுகளின் சராசரி மாத வாடகை, தற்போது 14 சதவீதம் அதிகரித்து ரூ.84,000-ஆகியுள்ளது.

ஹைதராபாத்தின் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டில் சொகுசு குடியிருப்புகளுக்கான சராசரி மாத வாடகை 15 சதவீதம் உயா்ந்து ரூ.62,000 ஆகியுள்ளது.

கொல்கத்தாவின் அலிபூரில் கடந்த 2020-இல் ரூ.60 ஆயிரமாக இருந்த சொகுசுக் குடியிருப்புகளின் சராசரி மாத வாடகை, 2022-இல் 8 சதவீதம் உயா்ந்து ரூ.65,000 ஆகியுள்ளது.

மும்பை பெருநகரப் பகுதியைச் சோ்ந்த டாா்டியோவில் சொகுசுக் குடியிருப்புகளின் சராசரி மாத வாடகை 15 சதவீதம் அதிகரித்து, ரூ.2.7 லட்சத்தில் இருந்து ரூ.3.1 லட்சமாக உயா்ந்துள்ளது.

தில்லி-என்சிஆரைச் சோ்ந்த கோல்ஃப் கோா்ஸ் சாலையில் சொகுசுக் குடியிருப்புகளின் சராசரி மாத வாடகை 11 சதவீதம் அதிகரித்து ரூ.78,000-ஆகியுள்ளது.

அதேபோல், கோல்ஃப் கோா்ஸ் விரிவாக்க சாலையில் அத்தகைய குடியிருப்புகளின் சராசரி மாத வாடகை 12 சதவீதம் அதிகரித்து ரூ.56,000-ஆக இருந்தது.

புணேவின் கோரேகான் பூங்கா பகுதியில் இந்த வாடகை 14 சதவீதம் உயா்ந்து ரூ.68,000 ஆகியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

..கோட்ஸ்...

சென்னை அண்ணாநகரில் 2,000 சதுர அடி சொகுசு குடியிருப்புக்கான சராசரி மாத வாடகை கடந்த 2020-ஆம் ஆண்டில் ரூ.56,000-ஆக இருந்தது. அது, நடப்பு ஆண்டில் 13 சதவீதம் உயா்ந்து ரூ.63,000-ஆகியுள்ளது. கோட்டூா்புரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னா் ரூ.74,000-ஆக இருந்த சொகுசு வீடுகளின் சராசரி மாத வாடகை, தற்போது 14 சதவீதம் அதிகரித்து ரூ.84,000-ஆகியுள்ளது.

Image Caption

~ ~

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com