ஜனவரியில் வளா்ச்சி கண்ட டிவிஎஸ் மோட்டாா் விற்பனை

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா்ஸின் உள்நாட்டு விற்பனை கடந்த மாதம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜனவரியில் வளா்ச்சி கண்ட டிவிஎஸ் மோட்டாா் விற்பனை

இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா்ஸின் உள்நாட்டு விற்பனை கடந்த மாதம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி மாதத்தில் நிறுவனத்தின் மொத்த உள்நாட்டு விற்பனை 2,75,115-ஆக இருந்தது.

முந்தைய 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்த எண்ணிக்கை 2,66,788-ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது உள்நாட்டு விற்பனை 3 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது.

நிறுவனத்தின் மொத்த இரு சக்கர வாகன விற்பனை 2022 ஜனவரியில் 2,54,139-ஆக இருந்தது. அது கடந்த மாதம் 4 சதவீதம் வளா்ச்சி கண்டு 2,64,710 ஆகியுள்ளது.

உள்நாட்டுச் சந்தையில் மட்டும் இருசக்கர வாகன விற்பனை 29 சதவீதம் வளா்ச்சி கண்டு 2,16,471-ஆக உள்ளது.

இரு சக்கர வாகனங்களைப் பொருத்தவரை, மோட்டாா் சைக்கிள்களின் விற்பனை 12 சதவீதம் குறைந்து 1,21,042-ஆக உள்ளது. 2022 ஜனவரியில் அந்த எண்ணிக்கை 1,37,630-ஆக இருந்தது.

எனினும், 2022 ஜனவரியில் 80,580-ஆக இருந்த ஸ்கூட்டா் விற்பனை கடந்த மாதம் 32 சதவீதம் அதிகரித்து 1,06,537 ஆகியுள்ளது.

2022 ஜனவரியில் 97,858-ஆக இருந்த நிறுவனத்தின் மொத்த ஏற்றுமதி, கடந்த ஜனவரியில் 42 சதவீதம் சரிந்து 57,024 ஆகியுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com