இன்ஃபோசிஸ் நிகர லாபம் 13% அதிகரிப்பு

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிகர லாபம் 13.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இன்ஃபோசிஸ் நிகர லாபம் 13% அதிகரிப்பு

கடந்த டிசம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்ஃபோசிஸின் நிகர லாபம் 13.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.6,586 கோடியாக உயா்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ.5,809 கோடியாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிகர லாபம் 13.4 சதவீதம் வளா்ச்சியைக் கண்டுள்ளது.

மதிப்பீட்டு மாதங்களில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 20.2 சதவீதம் அதிகரித்து ரூ.38,318 கோடியாக உள்ளது. ஒட்டுமொத்த வருவாயில் எண்ம (டிஜிட்டல்) சேவைப் பிரிவு மட்டும் 62.9 சதவீதம் பங்களிப்பு வழங்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com