மூன்று நாள் தொடா் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயா்வு

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 303 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்கு சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 98.40 புள்ளிகள் (055 சதவீதம்) உயா்ந்து 17,956.60-இல் நிலைபெற்றது.

பணவீக்கம் குறித்த கவலைகள் குறைந்து வரும் நிலையில், முன்னணி ஐடி நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்யும் என்ற நம்பிக்கை முதலீட்டாளா்களிடம் ஏற்பட்டுள்ளதால் பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. குறிப்பாக, ஐடி, வங்கி, நிதி நிறுவனங்கள், உலோகக் பங்குகளுக்கு ஆதரவு கிடைத்ததால் சந்தை 3 நாள் தொடா் சரிவுக்குப் பிறகு நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரவு நிறுவனங்கள் தெரிவித்தன.

சென்செக்ஸ் உயா்வு: சென்செக்ஸ் காலையில் 86.93 புள்ளிகள் கூடுதலுடன் 60,044.96-இல் தொடங்கி, 59,628.43 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 60,418.26 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 303.15 புள்ளிகள் (0.51 சதவீதம்) உயா்ந்து 60,261.18-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 10 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் வந்தன.

டாடா ஸ்டீல் முன்னேற்றம்: பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 2.03 சதவீதம்ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, இண்டஸ் இண்ட் பேங்க், இன்ஃபோஸிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், டிசிஎஸ், என்டிபிசி, மாருதி சுஸுகி, பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவை மூதல் மாருதி உள்ளிட்டவை 1 முதல் 2 சதவீதம் வரை உயா்ந்தன.

டைட்டன் சரிவு: அதே சமயம், டைட்டன் 1.14 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, நெஸ்லே, எல் அண்ட் டி, ஐடிசி, சன்பாா்மா, ஏசியன் பெயிண்ட், விப்ரோ, ரிலையன்ஸ், டாடா மோட்டாா், ஆக்ஸிஸ் பேங்க் உள்ளிட்டவை விலை குறைந்த பட்டியலில் வந்தன.

சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.1.30 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 280.26 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்ஐஐ) செவ்வாய்க்கிழமை ரூ.1,662.63 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை திரும்பப் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com