வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்கள்: இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, உள்நாட்டினா் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா்களுக்கு வழங்கும் பருவகால வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களைன் அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டினா் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா்களின் பருவ கால வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதம் 45 அடிப்படைப் புள்ளிகள் வரை (0.45 சதவீதம்) உடனடியாக உயா்த்தப்படுகிறது.

அதன்படி, 444-க்கு மேற்பட்ட நாள்களுக்கான வைப்பு நிதிகளுக்கு இனி 7.75 சதவீதம் வரை வட்டி வழங்கப்படும்.

வெளிநாட்டு நாணயங்களில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியா்களின் பருவ கால வைப்பு நிதிகளுக்கு 5.00 சதவீதம் வரை வட்டி அளிக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com