எஸ் பேங்க் நிகர லாபம் 81% சரிவு

தனியார் துறை கடன் வழங்குநரான எஸ் வங்கி அதன் ஜீலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டு முடிவில் அதன் நிகர லாபம் ரூ.51.52 கோடியாக சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

தனியார் துறை கடன் வழங்குநரான எஸ் வங்கி அதன் ஜீலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டு முடிவில் அதன் நிகர லாபம் ரூ.51.52 கோடியாக சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதன் நிகர வட்டி வருமானம் 3ஆம் காலாண்டில் 11.7 சதவீதம் வளர்ச்சியடைந்து ரூ.1,971 கோடியாக உள்ளது என்றது. அதன் நிகர முன்பணம் ஆண்டுக்கு ஆண்டு 10.4 சதவீதம் அதிகரித்து ரூ.1,94,573 கோடியாக உள்ள நிலையில் அதன் மொத்த வைப்புத்தொகை 15.9 சதவீதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து ரூ.213,608 கோடியாக உள்ளது.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:

சொத்துக்களை வெற்றிகரமாக ஜேசி ஃப்ளவர்ஸ் ஏஆர்சி-க்கு மாற்றியதன் மூலம், மொத்த செயல்படாத சொத்துகள் மற்றும் நிகர செயல்படாத சொத்துகள் விகிதங்கள் தற்போது முறையே 2 சதவீதம் மற்றும் 1 சதவீதமாகக் குறைந்துள்ளன. அதே நேரத்தில் செயல்பாடுகளின் வேகம், பிரிவுகள் முழுவதும் விநியோகம் மற்றும் கடந்த எட்டு காலாண்டுகளில் அதிக செயல்பாட்டு லாபம் ஆகியவற்றில் முன்னேற்றத்துடன் தொடர்கிறது என்றார்.

இதையும் பார்க்க  | 'ரன் பேபி ரன்' டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

அதன் ஜீலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் அதன் நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்பு கணக்கு விகிதம் 29.9 சதவீதம் ஆக இருந்தது. அதே வேளையில் எஸ் வங்கியின் மொத்த சொத்துக்கள் ஆண்டுக்கு 13 சதவீதம் அதிகரித்து ரூ.343,798 கோடியாகவும், வட்டி அல்லாத வருமானம் 56 சதவீதம் அதிகரித்து ரூ.1,143 கோடியாகவும் உள்ளது.  அதன் காலாண்டில் வங்கியானது சில்லறை விற்பனை மூலம் 44 சதவீதம் வலுவான வளர்ச்சியைப் பதிவுசெய்து ரூ.83,769 கோடியாக இருந்தது.  இது இதுவரை இல்லாத அதிகபட்ச வரவாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com