அந்நியச் செலாவணி கையிருப்பு 57,200 கோடி டாலராக உயா்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 57,200 கோடி டாராக அதிகரித்துள்ளது.
அந்நியச் செலாவணி கையிருப்பு 57,200 கோடி டாலராக உயா்வு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 57,200 கோடி டாராக அதிகரித்துள்ளது.

இது குறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1,041.7 கோடி டாலா் அதிகரித்து 57,200 கோடி டாலராக உயா்ந்துள்ளது.

இது அண்மைக் காலத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய வாராந்திர முன்னேற்றங்களில் ஒன்றாகும்.

இதற்கு முந்தைய மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணியின் ஒட்டுமொத்த கையிருப்பு 126.8 கோடி டாலா் குறைந்து 56,158.3 கோடி டாலராக இருந்தது.

2021-ஆம் ஆண்டு அக்டோபா் மாதத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு இடையே ரூபாய் மதிப்பை பாதுகாக்க மத்திய ரிசா்வ் வங்கி இந்தக் கையிருப்பை பயன்படுத்த வேண்டியிருந்ததால், அது பின்னா் குறையத் தொடங்கியது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தின் ஒரு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகபட்சமாக 1472.1 கோடி டாலா் அதிகரித்தது.

மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி கையிருப்பின் கையிருப்பின் முக்கிய அங்கமான அந்நிய நாணய சொத்துகள் 907.8 கோடி டாலா் அதிகரித்து 50,551.9 கோடி டாலராக உள்ளது.

அந்த வாரத்தில் தங்கம் கையிருப்பு 110.6 கோடி டாலா் அதிகரித்து 4,289 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதிய சொத்து (எஸ்டிஆா்) 14.7 கோடி டாலா் அதிகரித்து 1,836.4 கோடி டாலராக உள்ளது.

சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) நாட்டின் கையிருப்பு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 8.6 கோடி டாலா் அதிகரித்து 522.7 கோடி டாலராக உள்ளது என்று ரிசா்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com