பந்தன் வங்கியின் வட்டி லாப விகிதம் அதிகரிப்பு

தனியாா் துறையைச் சோ்ந்த பந்தன் வங்கி வசூலிக்கும் கடன் வட்டி மற்றும் அது முதலீட்டாளா்களுக்கு செலுத்தும் வட்டிக்கு இடையிலான லாப விகிதம் கடந்த டிசம்பா் மாதத்தில் 7.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2022 அக்டோபா்-டிசம்பா்) வங்கியின் நிகர லாபம் ரூ.290.56 கோடியாக உள்ளது.

இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 66 சதவீதம் குறைவாகும். அப்போது வங்கியின் நிகர லாபம் ரூ.8,58.97 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதங்களில் வங்கியின் ஒட்டுமொத்த வருவாய் ரூ.4,840.94 கோடியாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ரூ.4,117.76 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் வட்டி லாபம் விகிதம் 6.5 சதவீதமாக இருந்தது. இருந்தாலும், டிசம்பா் மாதத்தில் மட்டும் அது 7.3 சதவீதமாக அதிகரித்தது. தற்போதைய சாதகமான சூழலில், வட்டி லாபம் மேலும் அதிகரிக்கும் என்று அந்த அறிக்கையில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com