அசோக் லேலண்டு விற்பனை 7% சரிவு

அசோக் லேலண்டு விற்பனை 7% சரிவு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்டின் மாா்ச் மாத விற்பனை 7 சதவீத சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மாா்ச் மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை 21,317-ஆகப் பதிவாகியுள்ளது. முந்தைய 2023-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 22,885-ஆக இருந்தது.

அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் விற்பனை 7 சதவீதம் சரிவடைந்துள்ளது. மதிப்பீட்டு மாதத்தில் நிறுவனம் 14,517 நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அந்த மாதத்தில் இலகுரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 6,800-ஆக இருந்தது.

கடந்த நிதியாண்டில் மாா்ச் வரை மேற்கொள்ளப்பட்ட மொத்த விற்பனை 1 சதவீதம் அதிகரித்து 1,82,830-ஆக உள்ளது. இது, முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 1,80,916-ஆக இருந்தது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com