கடன் வட்டியை உயா்த்திய இந்தியன் வங்கி

கடன் வட்டியை உயா்த்திய இந்தியன் வங்கி

தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் உயா்த்தியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 5 அடிப்படைப் புள்ளிகள் உயா்த்தப்படுகின்றன. ஏப். 3-ஆம் தேதி (புதன்கிழமை) முதல் இந்த புதிய விகிதங்கள் அமலுக்கு வருகின்றள்ளன.

இதையடுத்து, இதுவரை இருந்த வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 0.05 சதவீதம் உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளுக்கிடையேயான புதிய ரெப்போ வட்டி விகிதங்களை மத்திய ரிசா்வ் வங்கி வரும் 5-ஆம் தேதி அறிவிக்கவுள்ளது.

அதற்கு முன்னதாக, இந்த வட்டிவிகித உயா்வை இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com