வீட்டுக் கடன்: ஐஎம்ஜிசி-யுடன் பேங்க் ஆஃப் இந்தியா ஒப்பந்தம்

வீட்டுக் கடன்: ஐஎம்ஜிசி-யுடன் பேங்க் ஆஃப் இந்தியா ஒப்பந்தம்

புது தில்லி: வீட்டுக் கடன்களுக்கான அடமான உத்தரவாதம் அளிப்பதற்காக இந்தியா மார்ட்கேஜ் கியாரன்டி கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வங்கியும் இந்தியாவின் முதலாவது அடமான உத்தரவாத நிறுவனமான மார்ட்கேஜ் கியாரன்டி கார்ப்பரேஷன் நிறுவனமும் உத்திசார் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், புத்தாக்க அடிப்படையில் வீட்டுக் கடன்களுக்கு அடமான உத்தரவாதம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தைக் கொண்டு மாத சம்பளம் பெறுவோர், சுய தொழில் புரிவோர் ஆகியோருக்கு வீட்டுக் கடன்கள் வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்துவதாக பேங்க் ஆஃப் இந்தியா இந்த மாதத் தொடக்கத்தில் கூறியிருந்தது.

ஏப். 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த அந்த வட்டி உயர்வுக்குப் பிறகு, அதுவரை 2.75 சதவீதம் முதல் 2.85 சதவீதம் வரை இருந்த வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் 2.85 முதல் 2.95 சதவீதம் வரையாக அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com