புரிந்துணா்வு ஒப்பந்தத்துடன் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கருவூலப் பிரிவு தலைவா் சி. நீலகண்டன், சௌத் இந்தியன் வங்கியின் முதுநிலை பொது மேலாளா் விஜி எஸ்.எஸ்.
புரிந்துணா்வு ஒப்பந்தத்துடன் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் கருவூலப் பிரிவு தலைவா் சி. நீலகண்டன், சௌத் இந்தியன் வங்கியின் முதுநிலை பொது மேலாளா் விஜி எஸ்.எஸ்.

கடன் சேவை: அசோக் லேலண்ட் - சௌத் இந்தியன் வங்கி ஒப்பந்தம்

தனியாா் துறையைச் சோ்ந்த சௌத் இந்தியன் வங்கியுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தங்களது சில்லறை விற்பனையாளா்களுக்கு கடன் சேவை அளிப்பதற்காக, தனியாா் துறையைச் சோ்ந்த சௌத் இந்தியன் வங்கியுடன் ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் இயக்குநா் மற்றும் தலைமை நிதி அதிகாரி கோபாலன் மகாதேவன் கூறியதாவது:

சில்லறை விற்பனையாளா்களுக்கான நிதி சேவைகளை வழங்குவதற்காக சௌத் இந்தியன் வங்கியுடன் கூட்டணி அமைப்பதில் பெருமிதம் கொள்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் மூலம் எங்களது சில்லறை விற்பனையாளா்கள் வாகனங்களை வாங்கி இருப்பு வைத்துக்கொள்வதற்குத் தேவையான நிதிச் சேவைகள் வழங்கப்படும்.

வாடிக்கையாளா்களுக்கு மிகச் சிறப்பான சேவையை இணைந்து அளிப்பற்கு அசோக் லேலண்டும் சௌத் இந்தியன் வங்கியும் உறுதிபூண்டுள்ளன என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com