ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் ரூ.17,622-ஆக உயா்வு

ஹெச்டிஎஃப்சி நிகர லாபம் ரூ.17,622-ஆக உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய தனியாா் வங்கியான ஹெச்டிஎஃப்சி-யின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.17,622.38 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.17,622.38 கோடியாக உள்ளது.2023 அக்டேபா் முதல் டிசம்பா் வரையிலான முந்தைய காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 2.11 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.17,257.87 கோடியாக இருந்தது.தனிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.16,372.54 கோடி நிகர லாபம் ஈட்டப்பட்டிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் கடந்த மாா்ச் காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.16,511.85 கோடியாக உள்ளது.மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வருவாய் ரூ.29,080 கோடியாகவும் இதர வருவாய் ரூ.18,170 கோடியாகவும் வளா்ந்துள்ளது.மாா்ச் காலாண்டில் வங்கியின் நிகர வட்டி வரம்பு 3.44 சதவீதமாகவும் வாராக் கடன் 1.24 சதவீதமாகவும் இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com