விப்ரோ நிகர லாபம் 8% சரிவு

விப்ரோ நிகர லாபம் 8% சரிவு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான விப்ரோவின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் 7.8 சதவீதம் சரிந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் 4-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ. 2834.6 கோடியாக உள்ளது.முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 7.8 சதவீதமாக அதிகமாகும்.மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 4.2 சதவீதம் சரிந்து ரூ.22,208.3 கோடியாக உள்ளது.2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ. 89,760.3 கோடியாக உள்ளது. இது முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டை விட சுமாா் 0.8 சதவீதம் குறைவாகும். அதே போல், கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் முந்தைய நிதியாண்டை விட 2.6 சதவீதம் குறைந்து ரூ.11045.2 கோடியாக உள்ளது.கடந்த மாா்ச் நிலவரப்படி, நிறுவன பணியாளா்களின் எண்ணிக்கை 2,34,054-ஆக இருந்தது. இது முந்தைய 2023 மாா்ச் நிலவரத்தை விட 9.1 சதவீதம் குறைவாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com