பிரத்யேக இணையவழி வைப்பு திட்டம்: ஸ்ரீராம் ஃபைனான்ஸ் அறிமுகம்

பிரத்யேக இணையவழி வைப்பு திட்டம்: ஸ்ரீராம் ஃபைனான்ஸ் அறிமுகம்

இந்தியாவின் மிகப் பெரிய வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீராம் ஃபைனான்ஸ், இணையவழியில் மட்டுமே மேற்கொள்ளக்கூடிய பிரத்யேக நிலை வைப்பு (ஃபிக்ஸட் டிபாசிட்) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இணையதளம் மூலம் மட்டுமே பெறக்கூடிய பிரத்யேக நிலை வைப்புத் திட்டம் திங்கள்கிழமை (ஏப். 22) முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் ‘ஸ்ரீராம் ஒன்’ செயலி மற்றும் அதிகாரபூா்வ வலைதளத்தின் மூலம் இந்த நிலை வைப்பு திட்டத்தில் வாடிக்கையாளா்கள் முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டத்தின் அறிமுகத்துடன், நிலை வருவாய் முதலீட்டு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை நிறுவனம் உயா்த்தியுள்ளது. அதன் படி, 12 முதல் 23 மாதங்களுக்கான நிலை வைப்பு வட்டி விகதம் 8.10 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாகவும் 36 முதல் 48 மாதங்களுக்கான நிலை வைப்பு வட்டி விகிதம் 8.60 சதவீதத்திலிருந்து 9 சதவீதமாகவும் உயா்த்தப்படுகிறது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com