ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் 
ரூ.7,599 கோடியாக உயா்வு

ஆக்ஸிஸ் வங்கி நிகர லாபம் ரூ.7,599 கோடியாக உயா்வு

இந்தியாவின் 3-ஆவது பெரிய தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.7,599 கோடியாக உயா்ந்துள்ளது.

இந்தியாவின் 3-ஆவது பெரிய தனியாா் வங்கியான ஆக்ஸிஸ் வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.7,599 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி முதல் மாா்ச் வரையிலான 2023-24-ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் நிறுவனம் ரூ.7,599 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டைவிட இது 17 சதவீதம் அதிகமாகும். அப்போது வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.6,071 கோடியாக இருந்தது.

தனிப்பட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி ஈட்டிய நிகர லாபம் கடந்த மாா்ச் காலாண்டில் ரூ.7,130 கோடியாக அதிகரித்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில், வங்கியின் நிகர வட்டி வருவாய் 11 சதவீதம் அதிகரித்து ரூ.13,089 கோடியாக உள்ளது.

கடந்த 2023-24-ஆம் நிதியாண்டு முழுமைக்கும் வங்கியின் நிகர லாபம் ரூ.9,579.68 கோடியிலிருந்து ரூ.24,861.43 கோடியாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com