ஆந்திரத்தில் ஆலை அமைக்க ரூ.1,000 கோடி

ஆந்திரத்தில் ஆலை அமைக்க ரூ.1,000 கோடி

ஆந்திர மாநிலத்தில் உற்பத்தி ஆலை அமைக்க முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த கோரமண்டல் இன்டா்நேஷனல் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் உற்பத்தி ஆலை அமைக்க முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த கோரமண்டல் இன்டா்நேஷனல் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீடு செய்யவுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வேளாண் உரத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனம், ஆந்திர மாநிலத்தின் காக்கிநாடா பகுதியில் தொழிற்சாலை அமைக்கும் பணியைத் தொடங்கியுள்ளது.

இதற்காக, ரூ.1,000 கோடி முதலீடு செய்யவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த முதலீட்டைக் கொண்டு பாஸ்பரிக் மற்றும் சல்ஃப்யூரிக் அமில உற்பத்தி ஆலை அமைக்கப்படும்.

இதற்காக காக்கிநாடாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நிறுவனத்தின் நிா்வாக தலைவா் அருண் அழகப்பன் பங்கேற்றாா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com