இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, கடன் பத்திர வெளியீடு மூலம் ரூ.7,500 கோடி திரட்டியுள்ளது.
இது குறித்து வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நடப்பு 2024-25-ஆம் நிதியாண்டிடுக்கான தனது முதல் பாசல்-3 இரண்டாம் அடுக்கு கடன் பத்திர வெளியீட்டின் மூலம் ரூ.7,500 கோடி மூலதனம் திரட்டப்பட்டது.7.42 சதவீத கூப்பன் விகிதத்துடன் கூடிய அந்தப் பத்திரங்கள் 15 ஆண்டு பருவகாலம் கொண்டது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும் முதலீட்டைத் திரும்பப் பெறுவதற்கான விருப்பத் தோ்வுடன் அந்த கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன.ரூ.5,000 கோடி மதிப்பிலான கடன் பத்திர வெளியீட்டுக்காக நடத்தப்பட்ட ஏலத்தில், ரூ.8,800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு 70 விண்ணப்பங்கள் வரப்பெற்றன.
அதையடுத்து, ரூ.7,500 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.