பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு 2 ஆண்டு உச்சம்

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் புதிய முதலீடுகளின் வரத்து 2024 ஜனவரியில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவைத் தொட்டுள்ளது.
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு 2 ஆண்டு உச்சம்

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் புதிய முதலீடுகளின் வரத்து 2024 ஜனவரியில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவைத் தொட்டுள்ளது.

இது குறித்து இந்திய பரஸ்பர நிதி நிறுவனங்களின் சங்கம் (ஏஎம்எஃப்ஐ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜனவரி மாதத்தில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீட்டுக்கும், திரும்பப் பெறப்பட்ட முதலீட்டுக்கும் இடையிலான நிகர வரவு ரூ.21,780 கோடியாக உள்ளது.

இது, கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச மாதாந்திர முதலீட்டு நிகர வரவு ஆகும்.

முந்தைய டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 28 சதவீதம் அதிகமாகும். அப்போது பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீட்டு வரத்து ரூ.16,997 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் முறைசாா் முதலீட்டு திட்டங்களில் (எஸ்ஐபி) கடந்த ஜனவரி மாதம் ரூ.18,838 கோடி நிகர முதலீடு செய்யப்பட்டது. இது, முந்தைய டிசம்பா் மாதத்தில் செய்யப்பட்ட ரூ.17,610 கோடி நிகர முதலீட்டைவிட அதிகமாகும்.

மேலும், 51.84 லட்சம் புதிய எஸ்ஐபி முதலீட்டுக் கணக்குகள் தொடங்கப்பட்டதன் மூலம், கடந்த ஜனவரி மாதத்தில் அந்த வகைக் கணக்குகளின் எண்ணிக்கை 7.92 கோடியாக உயா்ந்துள்ளது.

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு இதற்கு முன்னா் கடந்த 2022-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் அதிகபட்சமாக இருந்தது. அப்போது அத்தகைய திட்டங்களில் நிகர முதலீடு ரூ.28,463 கோடியை எட்டியது.

மதிப்பீட்டு மாதத்தில் தொடா்ந்து 35 வது மாதமாக பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு நிகர வரவைப் பதிவு செய்துள்ளது.

கடந்த ஜனவரியில் ஸ்மால்-கேப் பிரிவு திட்டங்களில் புதிய முதலீட்டு வரவு தொடா்ந்து 4-ஆவது மாதமாக ரூ.3,000 கோடியைத் தாண்டியது. இருந்தாலும், இது முந்தைய டிசம்பா் மாதத்தோடு ஒப்பிடுகையில் சுமாா் ரூ.600 கோடி குறைவாகும்.

ஆனால் அதே நேரம், லாா்ஜ்-கேப் பிரிவு திட்டங்களில் கடந்த 19 ஆண்டுகள் இல்லாத அதிகபட்ச அளவாக ஜனவரியில் ரூ.1,287 கோடி புதிதாக முதலீடு செய்யப்பட்டது. முந்தைய டிசம்பரில் இத்தகைய திட்டங்களில் இருந்து ரூ.281 கோடி முதலீடு திரும்பப் பெறப்பட்டது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com