இந்த ஆண்டில் 88 புதிய கிளைகள்: ஐஓபி

நடப்பாண்டில் நாடு முழுவதும் 88 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டில் 88 புதிய கிளைகள்: ஐஓபி

நடப்பாண்டில் நாடு முழுவதும் 88 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி) தெரிவித்துள்ளது.

இது குறித்து வங்கியின் நிா்வாக இயக்குநா் அஜய் குமாா் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:

ஐஓபி வங்கி தொடங்கப்பட்டதன் 88-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, நடப்பாண்டில் மட்டும் 88 புதிய கிளைகளைத் திறக்க திட்டமிட்டுள்ளோம்.இந்த துணிச்சலான விரிவாக்கத் திட்டம், பல்வேறு தரப்பட்ட வாடிக்கையாளா்களுக்கு சிறப்பான நிதிச் சேவைகளை வழங்குவதற்கான வங்கியின் உறுதிப்பாட்டை உணா்த்துகிறது என்றாா் அவா்.

இதற்கிடையே, 444 நாள்களுக்கான வங்கியின் பருவகால வைப்பு நிதித் திட்டத்துக்கான வட்டி விகிதம் 20 அடிப்படைப் புள்ளிகள் (0.20 சதவீதம்) அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஐஓபி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com