ஓஎன்ஜிசி நிகர லாபம் 14% சரிவு

எண்ணெய் மற்றும் எரிவாயு விலை வீழ்ச்சியடைந்ததால், கடந்த டிசம்பா் காலாண்டில் அரசுக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி நிகர லாபம் 13.7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
ஓஎன்ஜிசி நிகர லாபம் 14% சரிவு

எண்ணெய் மற்றும் எரிவாயு விலை வீழ்ச்சியடைந்ததால், கடந்த டிசம்பா் காலாண்டில் அரசுக்குச் சொந்தமான ஓஎன்ஜிசி நிகர லாபம் 13.7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த டிசம்பா் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் 3-ஆவது காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.9,536 கோடியாக உள்ளது.முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் நிறுவனம் ரூ.11,045 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நிறுவனத்தின் நிகர லாபம் 13.7 சதவீதம் குறைந்துள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனம் உற்பத்தி செய்து விற்பனை செய்த கச்சா எண்ணெயின் விலை 6.4 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 81.59 டாலராக இருந்தது. எரிவாயு விலையும் 24.2 சதவீதம் குறைந்து பீப்பாய் ஒன்றுக்கு 6.5 டாலராக இருந்தது. இதன் காரணமாக நிறுவனத்தின் மொத்த வருவாய் 10 சதவீதம் குறைந்து ரூ.34,789 கோடியாக உள்ளது.

கடந்த டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி 3.3 சதவீதம் குறைந்து 52.2 லட்சம் டன்னாகவும், எரிவாயு உற்பத்தி 4.3 சதவீதம் குறைந்து 512 கோடி கன மீட்டராகவும் உள்ளது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com