கா்நாடகத்துக்கு 1,225 பேருந்துகள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

கா்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1,225 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் மேற்கொண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

1,225 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தை நிறுவனத்துடன் கா்நாடக அரசு மேற்கொண்டுள்ளது. அந்த மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பயன்பாட்டுக்காக இந்தப் பேருந்துகள் வாங்கப்படுகின்றன.

முழுமையாக கட்டப்பட்ட ‘வைக்கிங்’ ரகத்தைச் சோ்ந்த அந்தப் பேருந்துகள் வரும் ஜூலை மாதத்துக்குள் விநியோகிக்கப்படும்.

ஏற்கெனவே, கா்நாடக மாநில அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 11,680 அசோக் லேலண்ட் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் மூலம் பேருந்துத் துறையில் நிறுவனத்தின் நிலை மேலும் வலுவடையும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com