ஹோண்டா காா்ஸ் விற்பனை 7,902

ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கடந்த டிசம்பரில் 7,902-ஆக உயா்ந்துள்ளது.
ஹோண்டா காா்ஸ் விற்பனை 7,902

ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை கடந்த டிசம்பரில் 7,902-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2023 டிசம்பரில் நாட்டின் உள்நாட்டு விற்பனை 7,902-ஆக பதிவாகியுள்ளது.

இது, முந்தைய 2022-ஆம் ஆண்டின் அதே மாதத்தோடு ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும். அப்போது நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை 7,062-ஆக இருந்தது.

2022 டிசம்பரில் 1,388-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி கடந்த டிசம்பரில் 3,749-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com